


நடந்து முடிந்த ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட 14 இந்தியர்களில் 12 பேர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ ராஜூ, பாகான் டாலாமில் குமரன் , பத்து ஊபானில் குமரேசன், டத்தோ கிராமாட்டில் ஜக்டிப் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் பந்திங் சட்டமன்ற தொகுதியில் ராயுடு, செந்தோசாவில் குணராஜ் ஜோர்ஜ், கோத்தா கெமுனிங்கில் பிரகாஷ், புக்கிட் காசிங்கில் ராஜிவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் ராஜசேகரன், ரெப்பாவில் வீரப்பன், நீலாயில் அருள் குமார், சிரம்பான் ஜெயாவில் குணசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கெடா புக்கிட் செலாம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சண்முகம் மற்றும் புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தீபன் சுப்பிரமணியம் ஆகியோர் மட்டுமே தோல்வி கண்டனர்.

