TVET முக்கிய தொழில் திறன் கல்வியாக விளங்குவதால் திறமையான பணியாளர்களை உருவாக்க முடிகிறது! பட்டமளிப்பு விழாவில் மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

செர்டாங், ஆக 14-
ILJTM எனப்படும் தொழில் திறன் கல்வி பட்டமளிப்பு விழாவில்
மலேசியா முழுவதும் உள்ள 32 தொழில் திறன் கல்வி பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்றும் நாளையும் பட்டம் பெறுவது பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

இன்று செர்டாங் Meaps மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் தலைமையேற்று உரையாற்றினார்.

ஜப்பான்-மலேசியா தொழில்நுட்ப நிறுவனம் (JMTI), பயிற்சி மையம்,
உயர் தொழில்நுட்பம் (ADTEC) மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ILP) இருந்து தேர்ச்சி பெற்ற
அனைத்து பட்டதாரிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

கடினமாக உழைத்த பிறகு லட்சியக் கனவை அடைவதில் வெற்றி
வெற்றி பெற்று இருக்கிறீர்கள்.

தரமான மனித மூலதனத்தை உற்பத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு
குறிப்பாக கல்வித் துறையில் மிகவும் திறமையானவர்களை
உருவாக்குவதில் தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன் TVET பயிற்சி கைகொடுக்கிறது என்றார் அவர்.

12ஆவது மலேசியத் திட்டத்தில் தொழில் திறன் கல்விக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்
2023 பட்ஜெட் தாக்கல் செய்தபோது
சவாலை எதிர்கொள்ளும் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக TVET விளங்குகிறது என்றார்.

TVET முக்கிய தொழில் திறன் கல்வியாக விளங்குவதால்
திறமையான பணியாளர்களை உருவாக்க முடிகிறது.

இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அதே நேரத்தில்
வெளிநாட்டு தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைக்க உதவுகிறது என்றார் அவர்.

திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் இலக்கில் அரசு 2023 பட்ஜெட்டில்
6.7 பில்லியனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப
குறைந்தபட்சம் 55 விழுக்காடு பட்டதாரி மாணவர்களை உருவாக்க இலக்காகக் கொண்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles