மனிதவள பயிற்சி துறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டிப்ளோமா பட்டம் பெற்று மகிழ்ந்தனர்

செர்டாங், ஆக 14-
செர்டாங் Maeps மாநாட்டு அரங்கில் இன்று மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மனிதவளத் தொழில் பயிற்சி துறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டிப்ளமோ பட்டம் பெற்று மகிழ்ந்தனர்.

மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார், மாணவர்களுக்கு டிப்ளமோ பட்டபடிப்பு சான்றிதழ்களை வழங்கி கொளரவித்தார்.

தொடர்ந்து 26 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் மனிதவள அமைச்சின் தீவேட் தொழில் கல்வி துறைகளில் பட்டம் பெற்று மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி, பொறியியல், மின்னியல், அச்சு, போக்குவரத்து, வெல்டிங் போன்ற துறைகளில் மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

நாடு முழுவதும் உள்ள 32 தொழில் பயிற்சி மையங்களில் 6,519 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

அந்த வகையில் இன்று காலையில் நடைபெற்ற விழாவில் 1,069 மாணவர்களுக்கு டிப்ளோமா பட்டம் வழங்கப்பட்டது.

மாலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் 794 மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles