மம்பாவ் தொகுதி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவேன்! பக்கத்தான் வேட்பாளர் லீ காய் யெட் அறிவிப்பு

சிரம்பான் ஜூலை 30 –
பக்கத்தான் ஹராப்பான் சார்பில் மம்பாவ் சட்டமன்ற தொகுதியில் லீ காய் யெட் போட்டியிடுகிறார் .

ஒரு வழக்கறிஞரான இவர் தொகுதி மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர்.

முதல் முறையாக மம்பாவ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இவர் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அன்பான வரவேற்பையும், தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று அவர் கூறினார்.

உங்கள் நம்பிக்கையே எங்களின் உந்துசக்தி. மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உழைப்பேன் என்று அவர் சொன்னார்.

மம்பாவ் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles