
முடித்திருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறைளில் பணிபுரிய அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இனிப்பான செய்தியை வெளியிட்டார்.
இந்த மூன்று துறைகளுக்கும் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கடந்த 9 மாதங்களாக தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு முழு அனுமதியை அமைச்சர் சிவகுமார் பெற்றுத் தந்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்திலும் இதற்கு அனுமதியை பெற்றுத் தர அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.
இந்நிலையில் இன்று இந்த மூன்று துறைகளுக்கும் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு செய்தார்.
பிரதமரின் இந்த செய்தி மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மனிதவள அமைச்சர் சிவகுமார் ஆகியோருக்கு இந்த வேளையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் சொன்னார்.

