சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களால் மருத்துவ கல்வியை தொடர முடியாத நிலை! அரசாங்கம் உதவ வேண்டும்!

கல்வியில் சிறந்த புள்ளிகளை பெற்ற சுமார் 30 மாணவர்களால் அவர்களின் விருப்பமான மருத்துவ கல்வியை தொடர முடியவில்லை என மஇகா கல்விக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் ஆர்.நெல்சன் தெரிவித்தார்.

மருத்துவ கல்வியை பயில விருப்பம் கொண்டு விண்ணப்பம் செய்ய மாணவர்களும் farmasi, bio medical போன்ற துறைகளில் மேற்கல்வியை தொடர அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்மாணவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் பல கனவுகளுடன் கல்வி தொடர்ந்த மாணவர்களுக்கு அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படாதது ஏற்க முடியாத ஒன்றாகும். அம்மணவர்களுக்கான மருத்துவ கல்வி வாய்ப்பை வழங்க அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அவர் சொன்னார்.

மருத்துவ கல்வியை தொடர பொது பல்கலைக்கழங்கங்களில் வாய்ப்பு கிடைக்காத சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவர்கள் தனியார் பல்கலைக்கழங்களில் மேற்கொள்ள அரசாங்கம் அவர்கள் கல்வி உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும்.

மேலும் இம்மாணவர்கள் மருத்துவ கல்விக்கு மறு விண்ணப்பத்தை இம்மாதம் 16ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். இணையம் வழியும் அல்லது உயர்கல்வி அமைச்சிலும் நேரடியாக மறு விண்ணப்பம் செய்யலாம்.

மருத்துவ கல்வியை பயில வேண்டும் என்ற எண்ணத்தில் சில மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சேர நினைப்பார்கள். இது அவர்களுக்கு பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்தும். மருத்துவ கல்வியை முடித்த பின்னர் அவர்கள் கடனாளியாகும் நிலை ஏற்படும். இந்த நிலைக்கு நம் மாணவர்கள் தள்ளப்பட்டுவிடக் கூடாது.

இதுவரை பி40 பிரிவைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயில வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறி மஇகாவை நாடியுள்ளனர்.இந்த விவகாரத்திற்கு உடனடி மாற்று வழியை கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும். இதன் தொடர்பில் நாங்கள் கல்வி அமைச்சிடம் பேசியுள்ளோம். மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த விவகாரத்தை பிரதமர் பார்வைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளதாக டத்தோ நெல்சன் கூறினார்.

இதற்கிடையில், tvet தொழிற்கல்வி வாய்ப்பை இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலவசமாக தொழிற்கல்வியை மேற்கொள்ள அரசாங்கம் வழங்கும் இந்த கல்வி திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டத்தோ நெல்சன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles