

ஈப்போ செப் 14-
பேராக் மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று சீனப்பள்ளி மற்றும் தேசியப் பள்ளிக்கு தலா 20,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.
Kampung tawas சீனப்பள்ளிக்கு முதலில் வருகை புரிந்த அமைச்சர் சிவகுமார், அங்கு கட்டப்பட்டுள்ள திறந்த வெளி மண்டபத்தை சீரமைக்க 20,000 வெள்ளியை வழங்கினார்.
பின்னர் பெர்சாம் தேசியப் பள்ளிக்கு வருகையை மேற்கொண்ட அவர், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு 20,000 வெள்ளியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

