

ஈப்போ செப் 14-
தனியார் துறை முதலாளிகள் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என கடந்த மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து
சம்பந்தப்பட்ட முதலாளிகள் மனிதவள இலாகாவில் கோரிக்கை விடுத்து விண்ணப்பங்கள் செய்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
எடுத்துக்காட்டாக மனிதவள துறை அதிகாரிகள் வெளிப்படுத்திய தகவல்கள்படி மனிதவள துறை அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும் முதலாளிகளின் எண்ணிக்கையில், குறிப்பாக தோட்டங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என்றார் அவர்.
தொலைதூரப் பகுதிகளில் வங்கிக்குச் செல்வதில் சிரமம் மற்றும் அருகில் வங்கி இல்லாதது போன்ற பிரச்சனைகளை இவர்கள் எதிர் நோக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தொலைதூரப் பகுதிகளில் வங்கி முகப்பிடங்கள் இல்லாததால் முதலாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது.
முதலாளிகள் இதை சாதகமாகப் பயன்படுத்தி கொள்கிறார்கள் கூறப்படுவதாக நேற்று பேராக் மாநிலத்தில் உள்ள மனித வள துறை அலுவலகத்திற்கு வருகை புரிந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

