

ஈப்போ செப் 14-
பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மெங்கெலும்பு கம்போங் பாரு புக்கிட் மேராவில் நேற்று 300 குடும்பங்களுக்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்தார்.
கம்போங் பாரு புக்கிட் மேராவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மெங்கெலும்பு சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சாவ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வாரமும் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து மனித வள அமைச்சர் சிவகுமார் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு தீர்வு கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.