மீபா இளையோர் கால்பந்து போட்டி! பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

கோலாலம்பூர் ஏப் 28-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் இறுதியில் 15 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட இளையோர் கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

மேலும் பெண்கள் பிரிவிலிலும் போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டி களில் நாடு தழுவிய அளவில் 1,400 க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சிறப்பு வருகை தந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்ததோடு 50,000 வெள்ளி மானியமும் வழங்கி பேருதவி புரிந்தார்.

மீபா தலைவர் அன்பானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

மீபா துணை தலைவர் ஏஎஸ்பி இராஜன், உதவித் தலைவர் ஸ்ரீ சங்கர் உட்பட போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் இரண்டு தினங்கள் கடுமையான உழைப்பின் மூலம் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பேராக் தம்பூன் பிளேக் பந்தர்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை வென்றது.

தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சிறப்பு அதிகாரி டத்தோ சுரேஸ் குமார் வெற்றி பெற்ற தம்பூன் பிளேக் பந்தர்ஸ் கிளப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.

மேலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த மீபாவையும் அவர் பாராட்டினார்

போட்டியை காண வந்த பொதுமக்களும் மற்றும் பெற்றோர்களும் பெரும் உற்சாகம் அடைந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles