கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் குற்றமற்ற தலைமுறையை உருவாக்கும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடந்தேறியது!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஏப் 29-
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் குற்றமற்ற தலைமுறையை உருவாக்கும் படத்தில் காவல் துறையுடன் இணைந்து Briged Mic இன்று இறங்கியது.

நாடு முழுவதும் உள்ள தமிழ் வகை தேசியப் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய குற்றங்களை துணிச்சலுடன் நிராகரிக்கும், எளிதில் பாதிக்கப்படாத, மற்றும் குற்றங்களின் பலியாகாமல் தற்காத்துக் கொள்ளும் இளம் தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் பிரிகெட் மஇகா இன்று மிகப்பெரிய அளவில் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

Maju Institute Of Educational Development (MIED) ஏற்பாட்டில்
குற்றமற்ற தலைமுறை கருத்தரங்கின் நிறைவு விழாவிற்கு ம இகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிறப்பு வருகை புரிந்தார்.

டேவான் டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான்,
PULAPOL, ஜாலான் செமாராக் மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.

Bridget Mic ஆண்ட்ரூ டேவிட் நிகழ்ச்சி இயக்குநராக இருந்து கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.

அரச மலேசிய போலீஸ் படை,
கல்வி அமைச்சகம்
விலாயா பெர்செகுத்துவான் மற்றும் கல்வித் துறை ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டரசு பிரதேச காவல் துறை துணை தலைவர் Dato Mohd Hasani உட்பட காவல் துறை அதிகாரிகள் பெரும் அளவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles