
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஏப் 29-
உங்களின் எதிர்காலம் உங்கள் கையில் என்ற கொள்கையோடு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள் என்று மாணவர்களை ம இகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கட்டெழுங்குடன் தங்களது பெற்றோரின் அறிவுரையை கேட்டு நடக்க வேண்டும்.
மேலும் ஆசிரியர்களின் பேச்சை கேட்டும் நடக்க வேண்டும்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டாலே போதும்.
இல்லையெனில் நீளம் சட்டை அணிந்த காவல் துறையின் பேச்சை தான் கேட்க வேண்டி வரும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கூடாத நட்பு வேண்டாம். அது உங்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும்.
ஆகவே மாணவர்கள் உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வியில் மட்டும் ஆர்வம் செலுத்துங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நன்றாக படித்து பல்கலைக்கழகம் வரை செல்லுங்கள்.
உங்களை வரவேற்க ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம்
காத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் குற்றமற்ற தலைமுறையை உருவாக்கும் படத்தில் காவல் துறையுடன் இணைந்து Briged Mic இன்று டேவான் டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான்,
PULAPOL, ஜாலான் செமாராக் மண்டபத்தில் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது.
Bridget Mic தலைவர் ஆண்ட்ரூ டேவிட் நிகழ்ச்சி இயக்குநராக இருந்து கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.
அரச மலேசிய காவல் துறை,
கல்வி அமைச்சகம்
விலாயா பெர்செகுத்துவான் மற்றும் கல்வித் துறை ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த கருத்தரங்கை கூட்டரசு பிரதேச காவல் துறை துணை தலைவர் Dato Mohd Hasani அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

