பேராக் மாநில SOCSO அலுவலகம் சந்தாதாரர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவது பாராட்டுக்குரியது! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

ஈப்போ செப் 13-
பேராக் மாநிலத்தில் உள்ள சொக்சோ அலுவலகம் தனது சந்தாதாரர்களுக்கு சிறப்பான முறையில் சேவைகளை வழங்கி வருவது பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

இன்று பேராக் மாநில சொக்சோ தலைமையகத்திற்கு மனித வள அமைச்சர் சிவகுமார் சிறப்பு வருகையை மேற்கொண்டார்.

சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் உட்பட
Taiping, Kuala Kangsar, Teluk Intan, Tapah dan Sri
Manjung ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சொக்சோ அதிகாரிகளும் அமைச்சரை வரவேற்றனர்.

பேராக் சொக்சோ அலுவலகத்திற்கு
இன்றைய எனது பணிப் பயணம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் சொன்னார்.

பேராக் மாநில SOCSO அலுவலகத்தின் முயற்சிகளுக்கு மனித வள அமைச்சு தொடர்ந்து ஆதரவளிக்கும்

வேலை வாய்ப்பு சந்தை மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவது மற்றும் சமூக நல பாதுகாப்பை விரிவுபடுத்தவதில் சொக்சோ மிகப்பெரிய சேவையை வழங்குகிறது

இல்லத்தரசிகள் மத்தியில் இல்லத்தரசிகளுக்கான சமூக நல பாதுகாப்பு காப்புறுதியை விரிவுபடுத்துவும் இதில் அடங்கும் என்றார் அவர்.

மனிதவள அமைச்சின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் வகையில் பேராக் மாநில சொக்சோ அலுவலகம் செயல்படுகிறது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles