
கோலாலம்பூரில் உள்ள MITEC வளாகத்தில் நடைபெற்ற SME Bank XCESS அதிகாரப்பூர்வ நிகழ்வில்
80,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நேரடியாகவும், இணையம் வாயிலாகவும் கலந்துக் கொண்டனர்.
இந்த வெளியீட்டின் மூலம் SME வங்கி புதிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களையும் பஙேற்பாளர்களையும் தங்களின் SME BANK UMBRELLA PROGRAMME திட்டத்தின் வழி இணைத்துக் கொண்டது.
2023ம் ஆணடின் SME வங்கியின் தனித்துவம் வாய்ந்த திட்டமாக இது கருதப்படுகிறது.
இந்த நிகழ்வில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக், துணை சரஸ்வதி கந்தசாமி, தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சுரியானி, SME வங்கி XCESS 2023 இன் பங்கேற்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

