இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு 50 லட்சம் வெள்ளி கடனுதவி! துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவிப்பு

இந்திய குறு தொழில் வர்த்தகர்கள் பயன்பெறும் வகையில் 5 மில்லியன் ரிங்கிட் நிதி கிராண்ட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தொழில் முனைவோர் கூட்டுறவு கழகத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

நாட்டில் உள்ள குறு, சிறு, நடுத்தர வணிகர்கள் பயன்பெறும் வகையில் மடானி பொருளாதார திட்டத்தின்கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த 100 மில்லியன் ரிங்கிட் கான திட்டங்களை தொழில் முனைவோர் கூட்டுறவு கழகத் துறை அமைச்சர் இவோன் பெனடிக் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார்.

இந்த 100 மில்லியனில் கிட்டத்தட்ட 50 மில்லியன் ரிங்கிட் வர்த்தகர்களுக்கு கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

குறைந்தது 50,000 ரிங்கிட்டில் இருந்து 2 லட்சம் ரிங்கிட் வரை அவர்கள் கடன் உதவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles