எம்பாப்வே அசத்தல் – பிரான்ஸ் அதிரடியில் சுவீடன் படுதோல்வி!

நியூ ஜெர்சி: ஜூலை 1-
உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் ரவுண்ட்- 32 சுற்றில், சுவீடன் அணியை துவம்சம் செய்து, பிரான்ஸ் அணி கம்பீரமாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்வேயின் மின்னல் வேக ஆட்டத்தால் சுவீடன் அணி நிலைகுலைந்து போனது.

போட்டியின் ஆரம்பம் முதலே பிரான்ஸ் அணியின் கை ஓங்கியிருந்தது. ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் (45ஆவது நிமிடம்) பிரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாப்வே பந்தை ஸ்வீடன் தற்காப்பு அரணை உடைத்து, கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் மைக்கேல் ஒலிசே கொடுத்த பாஸை, பிரான்ஸின் இளம் வீரர் பிராட்லி பார்கோலா லாவகமாக கோலாக மாற்றி சுவீடனுக்கு அதிர்ச்சி அளித்தார்.

சுவீடன் அணி பதிலடி கொடுக்க எடுத்த முயற்சிகளை, பிரான்ஸ் வீரர்கள் தடுத்தனர். ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் மீண்டும் எம்பாப்வே ஒரு அடித்து, அணிக்கு வலுவான முன்னிலை பெற்று தந்தார்.

ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் சுவீடனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட்- 16 சுற்றில், பிரான்ஸ் அணி, பராகுவேயை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் அதிக கோல் அடித்தவர்களுக்கான ‘கோல்டன் பூட்’ விருதுக்கான போட்டியில், மெஸ்ஸி (6), எம்பாப்வே (6) இருவரும் முதலிடத்தில் உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles