
புத்ரா ஜெயா செப் 27-
நியோஸ் எனப்படும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் வழி ஏராளமான இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பயிற்சியில் பங்கேற்பாளர்கள் niosh பாதுகாப்பு கடவுச்சீட்டில் இலவசமாக இணைகின்றனர்.
வேலை தேடும் பட்டதாரிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (SMEs) இருக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு பாஸ்போர்ட் பயிற்சி பெறுவதற்கான கட்டணச் சுமையை குறைக்கவும் நியோஸ் உதவுகிறது.
அண்மையில் மனித வள அமைச்சர் வ சிவகுமார் அவர்கள் நியோஸ் பாதுகாப்பு பாஸ்போர்ட் பயிற்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த ஆண்டில்
நியோஷ் சாதனை இலக்கு 10,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

