

உள்ளூர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருகிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று மேலவையில் தெரிவித்தார்.
இன்று மேலவையில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன், செனட்டர் ஆர்மான் எழுப்பிய கேள்விகளுக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் பதில் அளித்தார்.
மலேசியர்கள் ஆர்வம் காட்டாத மற்றும் விரும்பாத வேலைகளில் அந்நிய தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
அதிகளவில் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதை குறைப்பதிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலை
வாய்ப்பில் வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் அந்நிய தொழிலாளர்கள் 15 சதவீதத்திற்கும் மேல் போகக்கூடாது என்று
12ஆவது மலேசியத் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அடிப்படையாக இருக்கும்
தொழில் மற்றும் அனுமதிக்கப்பட்ட துறைகளின் உண்மையான தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்றார் அவர்.
இதனிடையே 2021 முதல் இவ்வாண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி வரை
SOCSO புள்ளிவிபரங்களின் அடிப்படையில் MYFutureJobs
போர்ட்டலில் விளம்பரப்படுத்தப்பட்ட 8 லட்சத்து 781,330 வேலை காலியிடங்களின் எண்ணிக்கையில் 7 லட்சத்து 73,700 வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

