முற்போக்கு ஊதியக் கொள்கையை அரசாங்கம் மதிப்பாய்வுசெய்து வருகிறது! மேலவையில் மனிதவள அமைச்சர் சிவகுமார் பதில்

கோலாலம்பூர், செப். 26-
இப்போதைக்கு முற்போக்கு ஊதியக் கொள்கையை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருகிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று மேலவையில் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஊதியத்திற்கு பதிலாக முற்போக்கு ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.

தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப ஒப்பிடக்கூடிய வகையில் முற்போக்கு சம்பள மாதிரியை நடைமுறைப்படுத்து வதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (MTEN) இதை ஒப்புக்கொண்டுள்ளது என்று Senator Dato’ Arman Azha bin Abu Hanifah, YB Senator Dato’
Dr Nuing Jeluing மற்றும் YB Senator Datuk Seri Hajah Zurainah ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சிவகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.

முற்போக்கு சம்பள மாதிரியை நடைமுறைப்படுத்து வதற்கான முன்மொழிவு தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் மன்றத்திடம் (MTEN) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்
முற்போக்கான ஊதியக் கொள்கை முன்மொழிவு வெள்ளை அறிக்கை நடவடிக்கைகள் பொருளாதார அமைச்சகத்தின் கீழ் இப்போது உள்ளது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles