மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் அக். 7இல் மலாக்காவில் Jelaja Madani நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு!

புத்ரா ஜெயா செப் 27-
மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி Mydin Pulau Sebang Hypermarket Tampin, Melaka வில் ஜெலாஜா மடானி நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்வை மனித வள அமைச்சர் வ சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp, சொக்சோ, டேலாண்ட் கோர்ப், நியோஸ், மனிதவள மேம்பாட்டு கழகம் போன்ற நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கு பெறுகிறது.

வேலை வாய்ப்பு கண்காட்சி, இலவச மருத்துவ பரிசோதனை, தொழில் திறன் பயிற்சிகள் இந்த நிகழ்வில் இடம் பெற்றுள்ளது.

மலாக்கா வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles