‘உங்கள் உயில் உங்கள் கையில்!

‘உங்கள் உயில் உங்கள் கையில்’ என்ற தலைப்பில் பொது மக்களுக்காக உயில் எழுதும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்தது.

இக்கருத்தரங்கு கடந்த 24 ஆம் திகதி செப்டம்பர் மாதம் தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.இந்த கருத்தரங்கை வழிநடத்த மலேசிய பிரபல பேச்சாளர் வழக்கறிஞர் திரு பாண்டிதுரை வருகை புரிந்தார்.

ஒருவர் வாழும் காலத்தில் சேர்க்கும் அழியும் மற்றும் அழியா சொத்துகளுக்கு உயில் எழுதும் அவசியத்தை மக்களுக்கு விழிப்புணர்த்தும் வகையில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் ஏன்,எததற்கு,எப்பொழுது உயில் எழுத வேண்டும் என்பதை மிகவும் எளிமையாக மக்களுக்கு வழக்கறிஞர் திரு பாண்டிதுரை கூறினார்.இந்திய மக்கள் பலரும் உயில் எழுதும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை அவர் தெரிவித்தார்.

அதைக் கருத்தில் கொண்டு ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி மேலும் இதைப்போன்ற மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி மற்றும் மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபாவின் ஸ்தாபகர் மற்றும் தேசிய தலைவரான கலைமாமனி Dr பிரேமக்கண்ணன் தெரிவித்தார்.

மேலும் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த இடத்தைக் கொடுத்த காஜாங் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரி திருமதி விஜயலெச்சுமிக்கு ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி நன்றிகளைத் தெரிவித்தது.

இறுதியாக இந்த கருத்தரங்கு சிறப்பாக நடைபெற ஆதரவளித்த ஆதரவாளர்களுக்கும்,ஸ்குவாத்ஸ் மலேசியா உறுப்பினர்களுக்கும் ,வருகையாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் கலைமாமனி Dr பிரேமகண்ணன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles