


கோலாலம்பூர், ஆக 5-
சர்வதேச வணிகத் தலைமைத்துவ அங்கீகார விருதுகள் 2026
(International Business Leadership Recognition 2026) விழா அண்மையில்
சார்ஜெட் டிஜிட்டல் பொருளாதார நிறுவனம் (Chartered Institute of Digital Economy) மிகப்பெரிய அளவில் நடத்தியது.
MICCI Central இதற்கு முழு ஆதரவு வழங்கியது.
பெட்டாலிங் ஜெயா மேரியட் ஹோட்டல் நடைபெற்ற இந்த விழாவில்
அரச விருந்தினர் Y.A.M. Tengku Sulaiman Shah ibni Almarhum Sultan Salahuddin Abdul Aziz Shah Alhaj
Y.A.M. Tengku Laksamana Selangor கலந்து சிறப்பித்தார்.
Intelligence Sandbox (M) Sdn. Bhd நிறுவனத்தின் இயக்குநர்
YBhg. டத்தோ டாக்டர் எம். சங்கர் அவர்களுக்கு
“இந்த ஆண்டின் வளர்ந்து வரும் தொலைநோக்கு தொழில்முனைவோர்”
(Emerging Visionary Entrepreneur of the Year) விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

