பிரசாரப் பணிகளுக்கு மத்தியிலும்தீபாவளியன்று தந்தை வழி  உறவினர்களைச் வேட்பாளர் சந்தித்த குசைரி

Foto : Bernama

மலாக்கா, நவ 8-

மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் ரெம்பியா தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் முஹம்மது குசைரி முகமது கமால் கண்ணன், தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு இடையிலும் தீபாவளி தினத்தன்று தனது தந்தை வழி உறவினர்களைச் சந்தித்து மகிழ்ந்தார்.

இந்தியர் மற்றும் மலாய் இனப் பின்னணியைக் கொண்ட அவர், தமது அத்தை மற்றும் உறவினர்களை தாமான் ஸ்ரீ கெலேமாக் பகுதியில் சந்தித்தார். குடும்ப உறவுகளைப் பேணுவதும், உறவினர்களுடன் பண்டிகையைக் கொண்டாடுவதும் தமது நீண்டகால வழக்கம் என அவர் தெரிவித்தார்.

ரெம்பியா தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வரும் தனக்கு கிராமப்புற மக்கள் மற்றும் பல இன சமூகத்தினரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகக் குறிப்பிட்டார். வாக்காளர்கள் தற்போது வேட்பாளரின் பின்னணி, உள்ளூர் தொடர்பு மற்றும் மக்களுக்குச் சேவையாற்றும் திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்றால் இன, மத, அரசியல் வேறுபாடின்றி மக்களின் நலனுக்காகச் செயல்படுவதே தனது முதன்மை நோக்கம் என்றார். மேலும், ரெம்பியா பகுதியில் புதிய முதலீடுகளைக் கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சாலை மற்றும் வடிகால் வசதிகளை மேம்படுத்துதல், வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், இளைஞர்களுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்தார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles