அனுபவம் வாய்ந்த தோ மான், பாயா ரூம்புட் மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவார் – டாக்டர் வான் அஸிசா

மலாக்கா, நவ 8-

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் பாயா ரூம்புட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோ அஸ்மான் அபிடின், அரசாங்க நிர்வாகத்தில் நீண்டகால அனுபவம் கொண்டவர் என்பதால் மக்களுக்கு சிறந்த சேவையாற்றும் திறன் பெற்றவர் என டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அஸ்மான் அபிடின், அன்புடன் ‘தோ மான்’ என்று அழைக்கப்படுகிறார். அவரை நீண்டகாலமாக அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட வான் அசிசா, சிலாங்கூர் முன்னாள் முதலமைச்சர் மறைந்த டான் ஸ்ரீ காலித் இப்ராஹிமின் அரசியல் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே அவரது நிர்வாகத் திறனை கவனித்து வருவதாகக் கூறினார்.

மேலும், அரசாங்க நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் தேவைகள் தொடர்பான விவகாரங்களை நன்கு அறிந்துள்ள டோக் மான், இதற்கு முன்பு வகித்த பொறுப்புகளிலும் சிறப்பான பணிப்பதிவைக் கொண்டிருப்பதாக அவர் பாராட்டினார். எனவே, பாயா ரூம்புட் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க அவருக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.

இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்தின் எஞ்சிய நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பணியாளர்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என வான் அசிசா வலியுறுத்தினார். வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, வாக்குப்பதிவு நாளன்று அதிகமானோர் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles