சிலாங்கூர் எப்.எம் 109.9 ஒலி அலை மக்கள் மத்தியில் நேர்த்தியாகப் பயணிக்கிறது! பாப்பா ராய்டு பெருமிதம்

ஷா ஆலம் ஆக.5 சிலாங்கூர் எப்.எம் 109.9 ஒலி அலை ரசிக பெரு மக்கள் மத்தியில் முக்கிய நடப்பு தகவல் தொடர்களுடன் தினமும் மிகவும் நேர்த்தியாகப் பயணிக்கிறது என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சி க்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.

இன்று காலையில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அவர், மெகா ஜோப் கேர் சிலாங்கூர் குறித்த தெளிவாக விளக்கத்தை சிலாங்கூர் வானொலி அறிவிப்பாளரிடம் பகிர்ந்து கொண்டார்.

மைஃபிய்ச்சர் ஜோப்ஸ் 2026 இன் வாயிலாக, 10 ஆயிரம் பல்வேறு விதமான வேலை வாய்ப்புகளையும் இதை முன்னெடுத்து செயல்படுத்தி வரும் 100 நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப் பாராட்டு தெளிவான விளக்கத்தைத் தந்தார்.

இதன் மூலம், மாநில அளவில் இதுகாறும் வேலை தேடி வரும் இளையோருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் தேவையான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, குடும்ப நலனையும் வருமானத்தையும் தேடி நலமோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தை மாநில அரசு வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது என்ற தகவலையும் சிலாங்கூர் வானொலி அறிவிப்பாளரிடம் அவர் கூறினார்.

சிலாங்கூரில் தத்தம் இருப்பிடமாகக் கருதி வாழ்ந்து வரும் பூர்வக் குடி மக்களின் கலை கலாச்சாரத்தை முன்னிருத்திக் காட்டும் பூர்வக் குடி யினர் தின விழா 2026 குறித்தும் தாம் தெளிவான விளக்கத்தைத் தாம் தந்ததாக பாப்பா ராய்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை தமது சிறந்த அறிவிப்பின் வழி, நேர்த்தியாக வழி நடத்திய அறிவிப்பாளர் அப்பிஸ் மற்றும் இந்த நிகழ்ச்சியை செவிமடுத்த சிலாங்கூர் மாநில வானொலி ரசிகர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாப்பா ராய்டு இந்த அறிவிப்பு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles