
ஷா ஆலம், ஆக 6
சிலாங்கூர் மாநில ரீதியில் வேலை தேடி வரும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளைப்பெறுவதற்கான மெகா ஜோப் கேர் சிலாங்கூர் 2026 வரும் ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தினங்களில் இங்கு ஷா ஆலம் கென்வென்ஷன் சென்டரில் நடைபெற விருப்பதால் இதில் பங்கேற்க நாட்டம் உடையோர் தங்களது கல்விச் சான்றிதழ் ஆவணங்களுடன் நேரில் வரும்படி மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் அழைப்பு விடுத்துள்ளார்.
சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநில இளையோர் நலன் கருதி முன்னெடுத்துள்ள ஜோப் கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்பு திட்டத்தின் வாயிலாக சிறந்த முறையில் அவர்கள் தொழில் துறையில் ஈடுபாடு வாழ்க்கையை வளமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் அமையப் பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
அன்றைய தினத்தில் 100 வேலை வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்க விரும்பலாம், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வேலைகள் இடம் பெறக் கூடும் என்பதால் நடைபெற விருக்கும் நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கி உரிய பணியில் அமரும்படி பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமானபாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார்.

