வேலை வாய்ப்பு கண்காட்சி மூலம் 158,792 பேர் வேலையில் அமர்த்தப்பட்டனர்! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

புத்ரா ஜெயா செப் 28-
நோய்த் தொற்று காலத்தில் வேலைகளை இழந்தவர்கள் உதவும் வகையில் மனிதவள அமைச்சு நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

வேலை தேடுதல் மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறையை எளிதாக்க இது அமைந்துள்ளது.

MYFutureJobs என்பது மலேசியாவின் அனைத்து வேலை தேடுபவர்கள் மற்றும் முதலாளிகளுக்கான தேசிய வேலை போர்ட்டலாகும்.

MYFutureJobs, வேலை தேடுவோரின் திறன்களின் அடிப்படையில் மிகவும் துல்லியமான வேலைகளை பெற்றுத் தருகிறது.

சொக்சோ நிறுவனத்தின் மூலம் நாடு தழுவிய அளவில் 15 இடங்களில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு கண்காட்சியில் 1,670 நிறுவனங்கள் பங்கேற்று நேர்முக தேர்வுகளை நடத்தியது.

இதன் வாயிலாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 792 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

நாட்டில் வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வு காண மனித வள அமைச்சின் MYFutureJobs மக்களுக்கு பெரிதும் உதவுகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles