Niosh ஏற்பாட்டில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 297 நிகழ்வுகள் நடத்தப்பட்டன! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா செப் 28-
மலேசியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நியோஸ் எனப்படும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் ஏற்பாட்டில் 297 நிகழ்வுகள் நடத்தப்பட்டிருப்பதாக மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்

வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

வேலை இடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மிகவும் முக்கியமானவை.

தொழில் துறைகளில் மலேசிய ஒரு சிறந்த நாடாக இருப்பதை உறுதி செய்ய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மிகவும் முக்கியமானவை. வேலையிடங்களில் உயிர்சேதங்களும் பொருள்சேதங்களும் ஏற்படாமல் இருக்க இதுப்போன்ற பயிற்சிகள் மிக முக்கியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

இதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நியோஸ் ஏற்பாட்டில் தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles