
புத்ரா ஜெயா செப் 28-
முற்போக்கான சம்பள நடைமுறையை விரைவில் நடைமுறைப்படுத்தவும் இந்த கொள்கையின் விவரங்களை நன்கு புரிந்து கொள்ளவும் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் அடுத்த வாரம் கூடும் அமைச்சரவையில் விளக்கம் அளிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர்
வ. சிவக்குமார் இன்று அறிவித்தார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், முற்போக்கான சம்பள முறையை விரைவில் உருவாக்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பான வெள்ளை அறிக்கையை சமர்பிப்பதற்காக அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறவுள்ள டேவான் ரக்யாட் கூட்டத்துக்கு அமைச்சரவை ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
மனிதவள அமைச்சர் சிவகுமார் தலைமையில் நேற்று அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக்கு பிந்தைய கூட்டத்தில் இது பற்றி தெரிவிக்கப்பட்டது..
பொருளாதார அமைச்சு வெள்ளை அறிக்கையை தயாரித்துள்ளதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
முதலில், சம்பள முறையை அமல்படுத்துவதை ஏப்ரல் 2024 வரை ஒத்திவைக்க அமைச்சு பரிந்துரைத்தது.
ஆனால், மற்ற அமைச்சர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
நேற்று காலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதை விவரங்களை விரிவாக விவாதித்தது.
இறுதியாக அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்குப் பிறகு ஒரு சில நாட்களுக்குள் அதை சமர்ப்பிக்க ஒப்புக்கொண்டது.
அரசாங்கத்தின் முற்போக்கான சம்பள முறையை அமல்படுத்துவதில் பல அமைச்சரவை உறுப்பினர்கள் உடன்படவில்லை என்றாலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதை அமல்படுத்துவது அரசாங்கத்திற்கு முக்கியம் என்று நம்புகிறார்.
ஆனால் குறுகிய காலத்தில் அதை செயல்படுத்த அவசரப்படக்கூடாது என்று அவர் கூறினார்.
முற்போக்கான ஊதிய முறையை அமல்படுத்த அரசு வற்புறுத்துவதாக பல முதலாளிகள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்,
ஆனால் அது அப்படி இல்லை.இந்த ஊதிய முறையைத் தேர்ந்தெடுக்கும் அல்லது செயல்படுத்தத் தயாராக இருக்கும் முதலாளிகள் அரசிடமிருந்து நிதிச் சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் சிவக்குமார் விளக்கம் அளித்தார்.

