
கோலாலம்பூர், அக்.6-
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு GYMNEMA HERBAL TEAயை அருந்துங்கள் எனும் தொலைக்காட்சி விளம்பரத்தை மக்கள் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு மக்கள் நலத்தில் அக்கறை கொண்டு பாரம்பரிய பொருட்களை வெளியிட்டு வந்த ஒரு பிரபல நிறுவனமாக BIGCORP-A BERHAD நிறுவனம் இன்றளவும் திகழ்ந்து வருகிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? GYMNEMA HERBAL TEA உங்களுக்கு நல்லது என்பதை அடிக்கடி வலயுறுத்தி வந்த BIGCORP-A BERHAD நிறுவனத்தை கடந்த 1993இல் டத்தோ விஜய் தொடங்கியதோடு 1995இல் முதல் முறையாக GYMNEMA HERBAL TEAயை சந்தையில் அறிமுகப்படுத்தினார்.
GYMNEMA HERBAL TEA மூலம் தொடங்கிய BIGCORP-A BERHAD வர்த்க பயணம் தற்போது LITNA எனும் பெயரில் உருவெடுத்து 25 ஆண்டுகள் வெற்றிப் பயணத்தை கொண்டாடவிருப்பதாக BIGCORP-A BERHAD நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தேவேந்திரன் விஜயன் கூறினார்.

BIGCORP-A BERHAD நிறுவனத்தின் பயணம் குறித்தும் 25 ஆண்டுகள் கடந்து வந்த பயணம் குறித்தும் தேவேந்திரன் அண்மையில் தேசம் தொலைக்காட்சியிடம் பகிர்ந்து கொண்டார்.
BIGCORP-A BERHAD நிறுவனம் 25 ஆண்டு பயணத்தில் சந்தையில் சுமார் 5 பொருட்களை வெளியீடு செய்துள்ளது. இதில் GYMNEMA HERBAL TEA முதல் மூலிகை பானமாக அறிமுகம் கண்டது.
இந்த GYMNEMA HERBAL TEA பானம் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்ல அருமூலிகை எனலாம். அதன்பிறகு LITNA பற்பசை வெளிவந்தது. இது மட்டுமன்றி PAPAYA SHOP சவர்காரம், முகக்கிரிம் உள்ளிட்ட பொருட்களும் வெளியீடு கண்டது. இன்னும் ஒரு மாதத்தில் முகத்திற்கு பயன்படுத்தும் ஒரு வகை கிரிம் வெளிவரவிருப்பதாக தேவேந்திரன் தெரிவித்தார்.

இந்த BIGCORP-A BERHAD நிறுவனம் எதிர்வரும் அக்டோபர் 7ஆம் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதற்காக கிள்ளான் AEON BUKIT RAJA விற்பனை மையத்தில் அக்டோபர் 7ஆம் தேதி COLORS OF INDIA நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்வில் தாங்கள் 25 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதோடு புதிய பொருட்களை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் தேவேந்திரன் சொன்னார்.
இந்த BIGCORP-A BERHAD நிறுவனம் தொடர்ந்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் போகிறது என்பதை அடுத்தடுத்த வீடியோ வழி தெரிந்து கொள்ளலாம்.

