ஆசிய போட்டியில்இரு தங்கம் வென்றசிவசங்கரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் மனிதவள அமைச்சர் சிவகுமார்

மலாக்கா அக் 7-
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் பதக்க இலக்கு நிறைவேறியது பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

மொத்தம் 27 பதக்கங்களுக்கு மலேசிய இலக்கு வைத்தது.

ஆனால் இப்போது 5 தங்கம், 6 வெள்ளி, 17 வெண்கலம் வென்று 28 பதங்களை மலேசிய வாகை சூடி உள்ளது.

இதன் மூலம் மலேசியாவின் பதக்க இலக்கு நிறைவேறியது பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.

இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளம் ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி குழு மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

டத்தோ நிக்கோல் டேவிட்டுக்கு பின்னர் இன்று பல போட்டிகளில் தங்கம் வென்று மலேசியாவின் பெருமையை சிவசங்கரி நிலை நாட்டி வருகிறார்.

அடுத்து வரும் போட்டிகளிலும் இவர் சாதனை படைக்க மனதார வாழ்த்துகிறேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles