ட்ரோன் தொழில் திறன் பயிற்சியை வழங்குகிறது ஆலிவர் டெக் அகாடமி

புத்ரா ஜெயா, அக் 6-

ஆலிவர் டெக் அகாடமி நிறுவனம் TVET உடனுடன் இணைந்து ட்ரோன் தொழில்நுட்ப திறன்களில் பயிற்சியை வழங்கி வருகிறது.

மலேசியாவில் UAV அல்லது ட்ரோன் தொழில் சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது.

தொழில்துறை கண்காணிப்பு, மேப்பிங், வான்வழி புகைப்படம் எடுத்தல், சிறிய பொருட்களின் விநியோகம், விவசாயம் மற்றும் பல துறைகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இளைஞர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்ப திறன் பயிற்சி அறிமுகம், வேலை வாய்ப்புகள், தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துதல், படைப்பாற்றல் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் பல்வேறு தொழில்கள் பற்றிய அறிவு போன்ற பல முக்கிய நன்மைகளைக் கொண் டுவருகிறது.

இது தொழில் முனைவோர் வாய்ப்புகளைத் திறந்து, இளைஞர்களின் எதிர்காலத்திற்கான மதிப்புமிக்க முதலீடாக மாற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மனித வள அமைச்சில் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் ஆலிவர் டெக் அகாடமி மேற்கொண்டு வரும் ட்ரோன் தொழில் திறன் கல்வி பயிற்சிகள் குறித்து அமைச்சர் சிவகுமார் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles