மேல் மருவத்தூர் அம்மா மறைவுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் இரங்கல்

கோலாலம்பூர் அக் 20-
மேல் மருவத்துார் அம்மா என்று பக்தர்களால் போற்றப்படும் பங்காரு அடிகளார் நேற்று காலமான செய்தியை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

82 வயதான
இவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பங்காரு அடிகளார் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆன்மிக குரு.

இவர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர்.

ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் நிறுவி வெற்றிகரமாக வழி நடத்தி வந்தார்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கருவறையில் பெண்களைப் பூஜை செய்ய அனுமதி வழங்கியவர்.

ஒரு மிகச்சிறந்த ஆன்மீக குருவாக விளங்கிய இவரின் மறைவு மிகப்பெரிய பேரிழப்பாகும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles