TVET தொழில் திறன் கல்வி வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள்! இந்திய மாணவர்களுக்கு சிவகுமார் வேண்டுகோள்

புத்ரா ஜெயா அக் 24-
சிறந்த மனித மூலதனத்தை உருவாக்கும் தளமாக தீவேட் தொழில் திறன் கல்வி விளங்குகிறது.

மனிதவள அமைச்சின் கீழ் இந்த தொழில் திறன் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தீவேட் தொழில் திறன் கல்வியை இரண்டாம் தர கல்வியாக கருதாமல் இதை பயில இந்திய மாணவர்கள் அதிக அளவில் முன் வரும்படி மனித வள அமைச்சர் வ. சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தீவேட் தொழில் திறன் கல்வியை பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர் காலம் காத்திருக்கிறது என்றார் அவர்.

இதனிடையே, ஜனவரி 2024 ஆம் ஆண்டுக்கான தீவேட் தொழில் திறன் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 2023 வரை திறந்திருக்கும்.

விண்ணப்பம் செய்ய விரும்பும் மாணவர்கள் https://mohon.tvet.gov.my/ அகப்பக்கத்தை அணுகலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles