மனித துன்பங்களை பொறுத்துக் கொள்ளவோ அல்லது சமரசம் செய்யவோ கூடாது !மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா அக், 23-
அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளும் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளில் மோசடி செய்யும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

சட்டவிதிகளை முதலாளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

இப்போதைக்கு
புதிய ஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை என்று அரசு முடிவு செய்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அந்நிய தொழிலாளர்களின் நுழைவை நிர்வகிப்பை உறுதி செய்ய வேண்டும்.

வரும்
2025க்குள் மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனைத் தாண்டாது.

இவ்வேளையில் அமைச்சு சட்டவிதிகளை பின்பற்ற தவறிய முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றார் அவர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் தொழிலாளர்கள்.
பங்களிப்பை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது

அதே சமயம் மனித துன்பங்களை பொறுத்துக்கொள்ளவோ அல்லது சமரசம் செய்யவோ கூடாது என்ற கொள்கையை மனித வள அமைச்சு நிலைநிறுத்துகிறது

தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்ந்து பேணி காக்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles