
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு
மனிதவள அமைச்சர்
சிவகுமாரின் வாழ்த்துச் செய்தி
புத்ரா ஜெயா அக் 23-
உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித் திருநாளான விஜயதசமியைப் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அறிவை தரும் கல்வி நம் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது.
அந்த கல்வியையும், பண்பாடு, கலாச்சாரம், ஞானம், இசை, அறிவு போன்றவற்றை வழங்கும் சரஸ்வதி தேவியை இன்று போற்றி வணங்குவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

