கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் சார்பில் 50ஆவது நவசக்தி நவ விழா விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர் அக் 24-
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியை முன்னிட்டு கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் சார்பில் நவசக்தி நவ விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு 50 ஆவது ஆண்டை முன்னிட்டு நவசக்தி நவ விழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது என்று இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் தெரிவித்தார்.

நேற்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு கழகத்தின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்.

கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் துணை தலைவர் திருமதி தேவிகா அவர்கள் துணை அமைச்சருக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார்.

இளம் தொழில் அதிபர் டத்தோ நாதன் தம்பதியருக்கும் இந்த நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles