தொழில்துறை தேவைகளுக்கு ஏற்பபயிற்சி திட்டங்களை வடிவமைக்க நிறுவனங்களுக்கு NOSS உதவுகிறது!

புத்ரா ஜெயா, அக்.25-
மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தலைமையில் தேசிய தொழில் திறன் தரநிலை (NOSS) தொடர்பான திறன் மேம்பாட்டுத் துறை (JPK) குழுவுடன் கலந்துரையாடலுடன் இன்று நடைபெற்றது.

NOSS என்பது ஒரு குறிப்பிட்ட துறை, வேலை நிலை மற்றும் அந்த திறன்களை அடைவதற்கான பாதையில் பணிபுரியும் திறமையான தொழிலாளிக்கு தேவையான திறன்களை கோடிட்டுக் காட்டும் ஆவணமாகும்.

TVET பயிற்சி மையங்களுக்கு, NOSS இன் வளர்ச்சியானது தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி திட்டங்களை வடிவமைக்க நிறுவனங்களுக்கு உதவுகிறது.

கடந்த மே மாதம் வரை 42 NOSS தரநிலை தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் (JTS) சான்றிதழ் பெற்றன. அவற்றில் பேட்டரி மின்சார வாகனங்களின் கண்டறிதல் மற்றும் பழுதுபார்ப்பு (BEV) ஆகியவையும் அடங்கும்.

உருவாக்கப்பட்ட ஒவ்வொரு NOSS யும், ஒரு குறிப்பிட்ட வேலைத் துறையில் உள்ள தொழில் கட்டமைப்பின் படி, வேலைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் வேலையைச் செய்யும் திறமையான பணியாளர்களால் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் சிவகுமார் கோடிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles