

கோலாலம்பூர் அக் 28-
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருகிறது. கலை, சமூக ஊடகங்களில் இருப்பவர்ககளின் திறமைகளை அங்கீகரிக்கும் பணியை நம்பிக்கை குழுமம் முன்னெடுத்து வருவது போற்றுலுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
நாட்டில் வர்த்தகம் மற்றும் இதர துறைகளில் வெற்றியை பதிவு செய்த தொழில் முனைவர்களை அங்கிகரிக்கும் வகையில்
நம்பிக்கை வர்த்தக விருது வழங்கப்படுவது பாராட்டுக்குரியது.
இத்தகைய விருதுகள் அவர்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரம் ஆகும்.
இந்த நிகழ்வை பிரம்மாண்டமான முறையில் நடத்திக் கொண்டிருக்கும் நம்பிக்கை குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான டத்தோ ஶ்ரீ முஹம்மது இக்பால் அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
இந்த நிகழ்வை வெகு சிறப்பாக ஒருங்கிணைத்துள்ள நம்பிக்கை குழுவினருக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விருது என்பது ஒருவரது சாதனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அளிக்கும் பட்டத்தையும் பாராட்டையும் உள்ளடக்கியதாகும்.
இது போன்ற விருது விழா வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாக மட்டுமல்லாமல் தங்களின் துறைகளில் அடுத்த நிலைக்குச் செல்ல அவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைகின்றது.
நம்பிக்கை சாதனையாளர் விருது பெறவிருக்கும் அனைத்து வெற்றியாளர்களுக்கும் இவ்வேளையில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்பிக்கை இணைய தள செய்திகளை நான் தொடர்ந்து வாசித்து வருபவன்.
நடுநிலையோடு எந்த பக்கமும் சாராமல் செய்திகளை வழங்குவது நம்பிக்கையின் சிறப்பாகும்.
அதன் செய்திகளின் தரமும் அதில் பயன்படுத்தப்படும் தமிழும் பாராட்டுதலுக்குரியது.
உடனுக்குடன் செய்திகளை முந்தி தருவதில் நம்பிக்கை முதல் நிலை வகிக்கிறது என்று அவர் சொன்னார்.
நம்பிக்கை குழுமத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற விழாவில் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனிஸ்வரன், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. மோகன், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா, எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பி.சகாதேவன், கோலாலம்பூர் ஓட்டப் பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ புலேந்திரன், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜஹாவர் அலி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

