
[
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசியா தமிழ் பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.
மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் நேற்று மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்தார்.
இந்நிலையில் சங்கத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் தலைவர் கு. தேவேந்திரன் மற்றும் பொருளாளர் கிறிஸ்ட் சின்னப்பன் ஆகியோர் தலா 500 வெள்ளி தீபாவளி அன்பளிப்பை நேரடியாக வழங்கினர்


