மலேசியா ஒளிவிளக்கு இயக்கத்தின் சார்பில் தமிழ் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசியா ஒளிவிளக்கு இயக்கத்தின் தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் கெப்போங் எடின்பெர்க், பெட்டாலிங் சரஸ்வதி, கோலாலம்பூர் அப்பர் ஆகிய தமிழ் பள்ளிகளைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது.

சமூக சேவையாளர் வெற்றி வேலன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் ஒவ்வொரு மாணவருக்கு தலா 50 வெள்ளி ரொக்கம் மற்றும் 100 வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.

மலேசியா ஒளிவிளக்கு இயக்கத்தின் செயலாளர் மகேஷ், இயக்கத்தின் உறுப்பினர்கள் செல்வ சிங்கம், ஏண்டி, சிகாமணி, கோபால் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles