நவம்பர் 5 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல்! நவம்பர் 19 ஆம் தேதி வாக்களிப்பு

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு வரும் நவம்பர் 5 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

வரும் நவம்பர் 19ஆம் தேதி வாக்களிப்பு நடக்கும் என்று மலேசியா தேர்தல் ஆணைய தலைவர் அப்துல் கனி சாலே தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் பக்கத்தான் ஹரப்பான் போட்டியிடுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையில் தேசிய முன்னணி மற்றும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையில் பெரிக்கத்தான் நேஷனல் போட்டியிடுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles