
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்முறை பேராக் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதால் அவருக்கு பதிலாக நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாரை போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் களம் இறங்குகிறது.
அதேபோல் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி போட்டியிடுகிறார்.
அஸ்மின் அலியிடம் இருந்து இந்த தொகுதியை மீட்டு எடுக்க சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
கோம்பாக் நாடாளுமன்ற தொகுதி கெஅடிலான் கட்சியின் கோட்டையாகும்.

