
தேர்தல் ஒத்துழைப்பது தொடர்பில் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்க தயாராக இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் அறிவித்துள்ளார்
இவரை சந்திப்பதில் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதில் அளித்துள்ளார்.
இருப்பினும் ஒரு சூத்திரதாரியான துன் டாக்டர் மகாதீர் முகமதுவை நம்ப வேண்டாம் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
துன் டாக்டர் மகாதீரை நம்பி போனால் இறுதியில் நமக்குதான் ஏமாற்றம் ஏற்படும்.
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் 22 மாதங்கள் பிரதமராக அவர் இருந்தபோது என்ன செய்தார் என்பது நமக்கு தெரியும்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏறீக துன் டாக்டர் மகாதீர் முகமது துடித்து கொண்டிருக்கிறார்.
இதற்காகத்தான் வஞ்சகத்துடன் அவர் நம்முடன் கூட்டணி வைத்து கொள்ள முடிவு செய்துள்ளார் என்று டாக்டர் இராமசாமி சூட்டிக் காட்டினார்

