
அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளியை கொண்டாடி மகிழும் அனைத்து இந்து பெருமக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக சுங்கை பூலோ இந்தியர் சமூக கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் மற்றும் சுங்கை பூலோ நியூ விலேஞ் ம இகா கிளைத் தலைவருமான அம்ப்ரோஸ் சாமிநாதன் குறிப்பிட்டார்.
தீபம் தரும் ஒளியைப் போல் எல்லோர் வாழ்விலும் இருள் நீங்கி ஒளிமயமான வாழ்க்கை மலரட்டும்.
நல்ல எண்ணங்கள் என்ற தீப விளக்கை ஏற்றி வைத்து இருள் என்ற தீமையை அளிப்பதே தீபாவளி ஆகும்.
இந்த தீபாவளி திருநாளில் நாம் அனைவரும் ஏழை எளிய மக்களை அரவணைப்போம்.
இந்த தீபாவளி மகிழ்ச்சி ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசிக்கட்டும்.
சிறப்பு வாய்ந்த இந்த திருநாளில் நாம் பகைமையை மறந்து ஒற்றுமை மலர பாடுபடுவோம் என்று செந்தூல் சிலாங்கூர் ரிக்ரேஷன் கிளப் தலைவருமான அன்பு ரோஸ் சாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்

