
செ.வே. முத்தமிழ் மன்னன்
சிரம்பான், ஏப்ரல் 6-
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் அடுத்த வாரம் முதல் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்.
இவர்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக சென்று வரும் வகையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சாலை பாதுகாப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பத்திரமாக தங்களது சொந்த ஊருக்கு சென்று திரும்பும் படி ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ அருள் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

