கோல குபு பாரு இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை!

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை சிலாங்கூர் ஜசெக இன்னும் முடிவு செய்யவில்லை.

காலியிடத்தை நிரப்பும் திறன் கொண்ட ஏராளமான உள்ளூர் தலைவர்களோடு மாநிலத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
ஆனால் வேட்பாளர் விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில ஜசெக செயலாளர் இங் ஸீ ஹான் கூறினார்.

தற்போது வரை மாநிலத் தலைவர்கள் சந்தித்து இந்த விஷயம் குறித்து
விவாதிக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கவனிக்கும் பொருட்டு நாங்கள் களமிறங்கியுள்ளோம். ஏற்பாடுகள் விரிவாக நடந்து வருகின்றன என்று அவர் சொன்னார்.

Selangor kin

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles