நான் தமிழனில்லை என்று சொன்ன அண்ணாமலை கர்நாடகாவில் நிற்க வேண்டியதுதானே: கனிமொழி எம்பி காட்டம்

அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்று கூறுகிறார். அவர் கர்நாடகாவில் இருந்தபோது, நான் தமிழன் இல்லை; கடைசி மூச்சு இருக்கும்வரை கன்னடியன் என்றார்.

அவர் ஏன் தற்போது கோவையில் நிற்கிறார்? வேண்டுமெனில் பெங்களுர், மைசூரில் நிற்கலாம். அவர் தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுவார்.

பிரதமருக்கு தமிழ் மீது திடீரென பற்று வந்துவிட்டது. கவலை வேண்டாம். அவர் தேர்தலுக்கு பிறகு ஓய்வாகவே இருப்பார். அப்போது அவர் தமிழ்மொழி பயில நல்ல தமிழ் ஆசிரியரை நமது முதல்வர் அனுப்பி வைப்பார் என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.

-தி இந்து நாளிதழ்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles