
கோலாலம்பூர் ஏப்ரல் 11-
ETS ரயில் பயண தடையால் நான்கு மணிநேரம் சிக்கித் தவித்த பயணிகளுக்கு இரயில் சேவைக்கான முழு கட்டணத்தையும் காப்பிட்டுத் தொகையையும் திருப்பி தரும் என்று கேடிஎம்பி இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
கோலாலம்பூரிலிருந்து பினாங்கின் பட்டர்வொர்த் நோக்கிய இரயில் பயணத்தின் போது பயணித்த பயணிகளைக் கேடிஎம்பி தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
பயணத்தைத் தொடராத பயணிகள், முழு கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்.
மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் callcenter@ktmb.com.my என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களின் பயண விபரங்களோடு விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Bernama

