
பெட்டாலிங் ஜெயா: அடுத்த மாதம் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள கோலா குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், ஜசெகாவுக்கு இந்திய வாக்குகளில் குறைந்தது 60% பெற வேண்டும் என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகையில் இந்தியர்கள் எந்த ஒரு வேட்பாளரையும் தேர்வு செய்ய உரிமை உள்ளது என்றார்.
கோலகுபு பாருவில் 40,000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18 விழுக்காடு இந்தியர்கள்.
இந்தியர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கிங் மேக்கராக உள்ளனர்.
அந்த வகையில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளருக்கு 60 விழுக்காடு இந்தியர்கள் வாக்குகள் தேவை என்று அவர் சொன்னார்.
கடந்த மூன்று தவணைகளில் ஜசெக வேட்பாளர் லீ கீ ஹோங் வெற்றி பெற்று வந்தார்.
புற்று நோயால் இவர் காலமானார் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் இடம் பெறுகிறது.
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான நேஷனல் இடையே இம்முறை மிகவும் கடுமையான போட்டி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
பிரி மலேசிய டூடே

